திரும்பி பார்கிறேன்
அப்பா கொடுத்த சட்டை !
ஓராண்டின் ஒரு துணி
ஒசத்தியான விலை இல்லை -ஆனால்
பட்டு தோற்று போகும்
பாசம் மட்டும் பின்னபட்டதால்
அம்மா கொடுத்த பட்சணம் !
விடியும் முன் விழித்துக்கொண்டு
முந்தானை முனை இழுத்து
அடுக்களை பூனையாக
அங்குமிங்கும் அலைந்து
படையலுக்கு முன்னும் ! பின்னும் !
எனக்காக ! பாசம் மட்டும் பிசைந்து
திரும்பி பார்கிறேன் -உன்னை
தீபாவளி !
தித்திப்பான நினைவுகள் !
அலைகளாய்...... எங்கெங்கும் ....
அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !