நட்பு வேண்டும்

ஆல் போல் தழைத்தாலும் வேறோங்கி நின்றாலும் துணை அது ஓர் நட்பு வேண்டும்...
ஞாலத்திலே பல உறவு நடிப்பதே அதன் விளைவு
உண்மை உள்ள ஓர் நட்பு வேண்டும்...
காக்கை கூட்டினை பகிர்ந்திடும் குயிலினம் தருணங்கள் வந்ததும் தனியே அது பறந்திடும்
அது போல் அல்லாமல்
சஞ்சலம் தவிர்த்திட ...
சரித்திரம் படைத்திட ...
புதிதாய் ஓர் நட்பு வேண்டும்.......

எழுதியவர் : வீச்சூர் இராஜேஷ் (1-Nov-13, 1:02 am)
Tanglish : natpu vENtum
பார்வை : 199

மேலே