விடிந்தால் தீபாவளி
விடியற்காலை அய்ந்து மணிக்கு,
நாலு மணிக்கே பலஇடங்களில்
விண்ணதிரும் மண்ணதிரும்
இடிமுழக்கம் அச்சுறுத்தும்
அதிர்ந்து விடாதீர்கள்
புயலோ புகம்பமோ என்று!
ஆர்வக்கோளாறில் சிலர்
முந்திக்கொண்டு முதல் நபர்களாய்
அதிரடி இடிமுழக்க வெடிகளை
வெடித்து மகிழ்வார்கள்.
அவர்களுக்கு அடுத்தவர்
நலன் பற்றி எண்ண நேரமிருக்காது.
விடிந்தால் தீபாவளி
விடியுமுன்னே வெடிப்பது
சம்பிரதாயமோ சாதனையோ?
காசு கரியாகட்டும்
அது அவர்கள் உழைப்பில் வந்தது.
உயிரினத்தை அச்சுறுத்துவதும்
இயற்கையை ஊனப்படுத்துவதும்
நியாயம் என்று சொல்ல
எங்கு பாடம் கற்றார்கள்?

