ஒரு கைக்குட்டையின் கடிதம்

அவள் கைரேகையில்
தொலைந்து விட்டேன் நான்.
கண்ணாடி முகத்தில்- ஒரு படலமாய்
தொட்டு விலகுகிறேன் நான் .
அவள்
இதழ் தொடுத்த முத்தங்கள் -ஈரங்களாய் .
வேர்வைத்தூரலை –நான்.
நான் மட்டும் சேர்த்து கொள்கிறேன் .
அவள் கண்சேர்ந்த கடலை பருகுகிறேன் .
நீரில் கைகழுவும் போதும்
உடன் இருப்பேன் .
உன் நீங்கா நினைவுகளை
சேர்த்து வைப்பேன் ...
நீ என்னை தொலைக்கும் வரை ...
# குமார்ஸ் ......

எழுதியவர் : குமார்ஸ் (4-Nov-13, 3:21 am)
பார்வை : 97

மேலே