தாகம் தாகம்

கூண்டோடு மொத்தமாய்
கொன்று குவித்தபோதும்
சதையும் இரத்தமுமாய்
தின்று உயிர்குடித்தபோதும்
பழிக்குப்பழி தீர்த்தபோதும்
வெறியடங்கவில்லையா?
இன்னும் ஏன் வதைக்கின்றீர்?
இனியேனும் வாழ விடுங்கள்!
முடக்க முடக்க
மீண்டும் துளிர்க்கும்..
ஒடுக்க ஒடுக்க
மீண்டும் உதிக்கும்..
இது நசுங்கிப்போகும் இனமுமல்ல!
இது குன்றிப்போகும் தாகமுமல்ல!
எரித்தாலும் புதைத்தாலும்
எழுவோம் புதிய சூரியனாய்!
நிற்போம் புதிய சரித்திரமாய்!
வாழவிடு, நீயும் நிம்மதியாக வாழ்!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (4-Nov-13, 6:47 pm)
பார்வை : 796

மேலே