பிரிவின் வலி

பல விநோதங்களை
இன்று கற்று கொண்டேன்
நீ இல்லாமல் விடியும்
என் காலை பொழுது !

உன் காலை வணக்கம்
இல்லாமல் தொடங்கும் என் கைபேசியின் பயணம் !

உன் நலன் அறியாமல்
நான் அருந்திய பிற்பகல் உணவு !
உன் குரல் கேட்காமல்
ஒலிக்கும் என் கைபேசி !

நீ அழைப்பாய் என காத்திருந்த
தருணங்கள் !

அழைப்பதற்கு யாரும்
இல்லாமல் காத்திருகின்றன !

இப்பொழுதெல்லாம் என் கைகள்
கிறுக்கவில்லை !

உனது பெயரை !
பேரதிசையம் அல்லவா!

எத்தனை மாற்றம் என்னுள்

பிரிவை தாங்கும் சக்தி வந்து விட்டது

என்று தலைகனமாய் நான் இருக்க!

நேற்று நான் உன்னுடன்
எடுத்த நிழற் படங்களை எல்லாம் பார்த்ததும் !

கண்களில் எட்டி பார்த்தது
உண்மையான கண்ணீர் துளிகள் !

அவைகளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு
திரும்பி பார்த்தேன் !

நீ வாங்கி கொடுத்த
பரிசு பொருட்கள் !

என்ன செய்வதென்று தெரியாமல்
முறைத்தேன்

திடீரென
அவை விழுந்து உடையும் போது
தாங்கி பிடித்தேன் !

காரணம் நீ வாங்கி கொடுத்ததால் அல்ல !

என் மனதை போல
அதுவும் நொறுங்கி விட கூடாது என்பதால்

ஏனென்றால் எனக்கு தெரியும்

இதயம் உடைந்த வலி !

என் வலிகளை முதன் முறையை நீ
அலட்சியபடுதினாய்


ஏன் இத்தனை காயங்கள்

பிரிவென்ற வலியின்
உச்ச கட்டத்தை காட்டிய உனக்கு நன்றி !

உன்னால் இனி
நானும் எதையும் தைரியமாய் சந்திக்கும் துணிவு வந்து விட்டது !

சந்தோசங்களை மட்டும் அனுபவித்து
பழக்க பட்ட என் மனது !
முதன் முறையாய்
துக்கம் என்ற காட்டுக்குள்
பயணம் செய்கிறது

கவலை படாதே
பயணம் என்றும் நன்றாகதான் முடியும் நம்பிக்கை !
ஏழு முறை அல்ல
எழுநூறு முறை யோசிக்கிறேன் !

நான் என்ன செய்தேன் என்று !
ஒரு முறை கூட ஒன்றும் தோன்றவில்லை

கடினமான வார்த்திகளை கூட
சாதரணமாக பேசிவிடும் உன் உதடுகளுக்கு
எப்படி புரிய வைப்பேன் !

நீ பேசியதால் புண் பட்டது என் மனது மட்டும்
அல்ல ! நானும் தான்!

சிறு விஷயம் என்றாலும் பெரியதாய் சந்தோசப்படும் என் மனதுக்கு எப்படி புரிய வைப்பேன் !

இந்த பெரிய பிரிவின் வலியை
சிறிதாய் எப்படி எடுத்து கொள்ள

உன்னுடன் நான் பயணம் சென்ற
பயண சீட்டுகளை எல்லாம் !
பத்திரமாய் வைத்திருந்தேன் !

இன்று தூக்கி எறிந்தேன் !

மனதில் புதைந்த நினைவுகளை
எப்படி தூக்கி எறிவேன் !

முன்பெல்லாம் உன் சாயலில் யாரயாவது
பார்த்தால் விரும்பி பார்க்கும் நான்!

இன்று நீயே வந்தாலும் பார்க்க மறுக்கிறேன்

நீ ஏற்படுத்திய ரணங்கள் கொஞ்சம் அல்ல'!

கோடி கணக்கில் சொல்ல வார்த்தைகள் அல்ல

கண்ணீர் ததும்ப நின்ற என் கண்களை
புன்னகை ததும்ப பார்த்து நின்ற உன் உதடுகளை
என்றும் நான் மறவேன் !

எல்லாவற்றிற்கும் என்னையே குறை கூறும்
உனக்கு தோன்றவில்லையா !
உன்னுடன் நட்பு கொண்டதை தவிர
வேறு எந்த பாவத்தையும் நான் செய்ய வில்லை என்று என் உயிர் தோழியே !

மறந்தாயே!

எழுதியவர் : GirijaT (4-Nov-13, 7:47 pm)
Tanglish : pirivin vali
பார்வை : 813

மேலே