பதில் சொல்வாளா பத்ரகாளி -- மெய்யன் நடராஜ்

நின்று கேட்கும் தெய்வம் என்று
அன்று கொன்ற அரசன்
கோயில்களை இடிப்பதனால்
அதிர்ந்து போய்விட்ட தெய்வமே..!

உன் சந்நிதியை
இடிக்கும் வேளை
திரிசூலத்தை சாணை
பிடிக்கக் கொடுத்திருந்தாயோ?

ஆயுதம் இருக்கும்
உனக்கே இந்தக் கதிஎனும்போது
நிராயுதபாணிகள்
எங்கள் நிலையை கொஞ்சம்
எண்ணிப்பார் தெய்வமே..

கல்லாய் இருப்பதுவும்
கஷ்டம் என்பது இப்போது
உனக்குப் புரியலாம்.
கல்லாய் போன எமது மனங்களை
எப்போது புரிந்து கொள்வாய்?

எங்களுக்காகத்தான்
எதுவும் கேட்கவில்லை
எஞ்சியிருக்கும் உனது
ஆலயங்கலாவ்து
மிஞ்சியிருக்க இப்போதாவது
நீ கேட்கக் கூடாதோ?

பதில் சொல்வாயா
என் பத்ரகாளி?

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Nov-13, 2:43 am)
பார்வை : 207

மேலே