இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை

நான் ஒடி களைத்துவிட்டேன்!
உங்கள் ஓட்டங்களோடு
என்னால் ஓடமுடியாது!

அகிம்சையின் இம்சையால்
பெற்ற சுதந்திரம் கொண்டாடி!

வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும்
இடையே சுவரெழுப்பி !

எத்தனை தேர்தல் வந்தாலும்
அழிக்கமுடியாத வறுமைகோட்டோடு!

வேலைவாய்ப்பு அட்டையை
புதுபிப்பது
மூடநம்பிக்கை என்றாகிப்போன

இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை!

* * *

தாய்மொழி மறந்த
கல்வி கற்று!

மனபாடம் மட்டுமே
அறிவு என்று!

தின்றதை கக்குவதே
தேர்வு என்றும்!

மாணவனின் திறமையை
மதிபெண்ணில் மட்டுமே கண்டு!

சுதந்திரம் என்பதை
சொல்லிமட்டுமே
பழகிய

இந்த வாழ்க்கை
பிடிக்கவில்லை!

* * *

தவறி விழுந்த பல்லிக்கு
பலன் கூறி!

பொன்னான நேரத்தை
அமுதம் விஷம் என
பகுத்து !

இல்லாத சாமிக்கு
சிலை வடித்து!

ஆளுக்கொரு பெயரை வைத்து!
அடுத்தவன் கோவிலை உடைத்து !

மனிதாபிமானம் மட்டும்
மறந்து போன
உங்களை தூக்கிலிடமுடியவில்லையே
என்பதால்

இந்த வாழ்க்கை
பிடிக்கவில்லை!

* * *
தப்பு தப்பு என்றே
தடுத்துப் பார்த்தும்
கேட்காத நெஞ்சு காதலித்து!

மூன்று வருடமாய்
முகம் பார்த்தலோடு நிறித்திகொண்டு!

கடைகண் பார்வைக்காக
கையேந்தி!

சிரிக்கும்போது தெறிக்கும்
எச்சிலை சகித்து!

முல்லை பூமுகம்
என புளுகித்து!

நீ மட்டும் போதும்
என் யாசித்து!

பயந்து பயந்து
காதலை சொன்னால்

உன் மதிப்பை இழந்து
நேரமாச்சு என்கிறாள் !

புரிந்து கொள்ளாத பெண்களுக்காய்!
தோற்றுப்போன காதலுக்காய்!

இந்த வாழ்க்கை
பிடிக்கவில்லை!

* * *
உழத் தெரிந்தவனுக்கு
மட்டும்
நிலம் உரிமை என்பது!

தாய்மொழி தவறாய்
பேசினால் தண்டனை தருவது!

உழவர் தினத்துக்கு மட்டும்
விடுமுறை விடுவது !

என்றால் எனக்கும்
வாழபிடிக்கும் !

* * *
போர்களத் தழும்பு
தேர்தலுக்கு அவசியம் என்றால்!

காவல் நிலையங்களை
கடவுள் பொறுப்பேற்றால்!

அறிவு என்பது
நிறைப்பது இல்லை!
சுரப்பது என உணர்ந்தால் !

வேலை என்பது கொடுப்பது இல்லை
செய்வது என தெறிந்தால்!

வாழ்க்கை வசப்படும்
நானும் வாழ்வேன்!

பிடிக்காத வாழ்க்கை எதுவரைக்கும்?

மாற்றங்கள் மாறாது
என்பது மாறாதவரைக்கும்!
* * *
கோடீஸ்வரன்

எழுதியவர் : கோடீஸ்வரன் (5-Nov-13, 8:13 am)
பார்வை : 953

மேலே