விரட்டிய காதல்
போ போ என்று
விரட்டும் உன்
வார்த்தைகள்
என் உயிரை
வெட்டி போகுதடி
முத்தம் தந்து
முள்ளால் குத்தும்
உன் இதழ்கள் சிரிப்புக்கே
உயிர் அறுகுதடி
வட்ட விழி பார்வையால்
என்னை சுத்தி பார்த்தே
என் கழுத்தில்
சுருக்கு போட்டவளே
இதழ் மடித்து
சொல் புதைத்து
ஊமை மொழி பேசி
உயிருடன்
சிலுவையில் ஏத்தியவளே
விளையாட்டாடி உனக்கு
என் வாழ்க்கை ?
எட்டி அடியடி பந்தாய்
செத்து போகிறேன்
ஒரு நொடியில்
உன் மடியில்