இக் கரைக்கு அக் கரைப் பச்சை

கடல் பெண் தன்
அலை முந்தானையை
மலைக் காதலனின்
முகத்தில் போர்த்தி ...
போர்த்தி ...அழகு பார்க்கிறாள் .....!

அவனோ ...................!
முகத்தில் உணர்ச்சி ஒன்றும்
காட்டாமல் கோபமாகவே
இருக்கிறான் ......! யார் மீது அவனுக்கு
கோபம் .....?

இருந்தாலும் .. கடல் பெண் ...
அலைகளால் சிரித்து... சிரித்து ....
அவன் மீது தழுவித் தழுவி
சீன்டிப் பார்க்கிறாள் ......

அவனோ ......பச்சைப் புடவைக்
கட்டி முந்தானையை பக்குவமாய்
மலை மீது போர்த்திய மண் மகளை
ஏக்கமாய்ப் பார்க்கிறான் ................................!
இக் கரைக்கு அக்கரைப் பச்சை
இது தானோ ......................................?

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (5-Nov-13, 6:08 am)
பார்வை : 71

மேலே