யாரை மன்னிக்க வேண்டும்
எனை எதிர்த்து
முகத்தில் குத்திக்கொண்டே
எதிரில் என் எதிரி..
மன்னிக்கிறேன்.
எதிரி வீரனவன்.
எனை அழிக்க
முதுகில் குத்திக்கொண்டே
மறைவில் என் தோழன்..
மன்னிக்க மாட்டேன்
தோழன் கோழையவன்.
எதிரியை
மன்னிக்க
பழகிகொள்கிறேன்.
பிழையாக கூட
மன்னிக்க
மறுத்து விடுவேன்
துரோகியை.
---------------------------------------------------------------------------
குறிப்பு : என் மானசீக ஆசான் கொ.பி.பி அய்யா அவர்களின் ”மன்னிப்பது மனித குணம் ” (154697) கவிதையை படித்தப்போது என் மனதில் தோன்றிய வரிகள் இவை.
----------------------------------------------------------------------------