காதலின் ஆரம்பநிலையில்

தனிமையில் சிரிப்பாய்!

கண்ணாடியின் தடிமன்
உன் பிம்பத்தால் மெலியும்!

சீப்பின் பற்கள் பழுதடைந்து போகும்!

ஒழுக்கம் கடை பிடிப்பாய்!

ஒரேநாளில் பலமுறை
அலங்கரித்து கொள்வாய்!

உன்னவள் பவனி வரும்
தெருமுனைகளின் பிள்ளையார்க்கு
நண்பனாவாய்!

உன் தூக்கம் குறையும்!

பசியின் புனிதம் புரியும்!

நீ தேவனாவாய்,
உன்னவள் தேவதையாவாள்,
உங்கள் தெரு பிள்ளைகள்
உங்களுக்கு தூதூவர்கள் ஆவார்கள்!

சில எதிரிகளும் முளைத்தெழுவர்......!

எழுதியவர் : நவீன் மென்மையனவன் (18-Jan-11, 3:13 pm)
சேர்த்தது : a.naveensoft
பார்வை : 424

மேலே