காதலின் இடைநிலையில்

எதிரிகள் நாவினால்
வருக்கப்படுவாய்!

போர்களத்தில் எதிரிகள்
அம்புகள் துளைத்த
போர்வீரன் போல்
உணர்வாய்!

உன் உள்ளத்தில்
இடி இடிக்கும்!

கண்களில் மழை
சொரியும்!

மௌனம் உன்னின்
சிறப்புமொழி ஆகிப்போகும்!

சிரிப்பு மறந்து போகும்!

அழவேண்டி மட்டுமே
கழிவறை கதவை
தாழ்ழிட்டுகொள்வாய்!

நமட்டு சிரிப்பும்,ஏளன பேச்சும்
அறிவுரைகளும் உனக்காய்
பிரதனமாகிப்போகும்!

முட்கிரீடம் தலைசூடி
காதலை நோக்கி
கடும்தவம் புரிவாய்!

காதலை
அணுகவும் இயலாமல்
அகலவும் இயலாமல்
நரக நெருப்பில்
கால்புதைதவனாய்
துடிதுடித்துபோவாய்..........!

எழுதியவர் : நவீன் மென்மையானவன் (18-Jan-11, 3:00 pm)
சேர்த்தது : a.naveensoft
பார்வை : 448

மேலே