செவ்வாயான் மங்கல்யான்

செவ்வாய்க்கு செவ்வாயன்று
செவ்வாயான் (மங்கல்யான்) சென்றாயினன்;
ஏந்திசென்ற பி எஸ் எல் வி
ஏற்றி வைத்து ஏற்றம் கொண்டனன்;
மெய்ஞானமும் உணர்ந்தானில்லை;
அஞ்ஞானமும் அறிந்தானில்லை;
எஞ்ஞானமும் ஏற்புடையானில்லை;
விஞ்ஞானமே வியப்பென்றே
விண்ணேறி விரைந்தேகினன்;
மீத்தேனை முகர்ந்திட்டே - படம்
மீட்டேயவன் பகிர்ந்திடுவான்;
விஞ்ஞான வளர்ச்சியொன்றே
இஞ்ஞால எழுச்சிஎன்று
பாங்குடனே பறைந்திட்டே
பாய்ந்து சென்றனன் மங்கல்யான் (செவ்வாயான்).


05.11.2013 செவ்வாய் கிரகத்திற்கு செலுத்தப்பட்டதன பொருட்டு சிந்தை கிரகத்தில் (பி)பறந்த கவிதையான்

எழுதியவர் : கிருஷ்ணமுர்த்தி D (6-Nov-13, 5:59 am)
பார்வை : 659

மேலே