போதுமென துடிக்கும் இதயம்

தூரத்தில் அவளின் பார்வை பட்டாலே சந்தோஷத்தில் உடைந்து போகும் இதயம்!
தைரியம் இருந்தும் அவளிடம் பேச போகும் பொழுது மட்டும் உதடுகளின் வேலை நிறுத்தம்!
இரவை தொலைத்து கூட தெரியாமல் அவளின் நினைவில் வாழும் உள்ளம்!
அவளுடன் வாழ துடிக்கும் இதயம், அவள் அருகில் வந்தால் மட்டும் அஞ்சுகின்ற அவலம்!
அவள் வரும் நேரம் மட்டும் நத்தையின்மீதேறி வரும்!
அவள் கடக்கும் நேரம் மட்டும் மின்னலை பிடித்து செல்லும்!
இவ்வுலகத்தில் ஒரு நொடியில் ஒரு ஜென்ம சந்தோசம்!
ஒரு நொடியில் அவளுடன் வாழ்ந்தாலே போதுமென துடிக்கும் இதயம்!

எழுதியவர் : ஜான் பவுல் (6-Nov-13, 8:49 am)
பார்வை : 171

மேலே