மன்னவன் வந்தானடி

மாலை வரும் நேரமெல்லாம்
மன்னன் வர காத்திருந்தால்
மன்னவன் வந்தான் - மலரே
உன் மெனமுகம் காணாமல்
என் மனம் நொந்தது
உன்னை தழுவாமல் என்
கைகள் துறுதுறுக்கிறது
உன் பெயரை உச்சரிக்காமல்
என் நா தழுதழுக்கிறது என்றான்
மன்னா நீயில்லாமல் சிரிக்கும் பூ
கூட அழுகிறது - உன்
பிரிவுத்துயர் தாங்காமல் என்
நெஞ்சம் விம்முகிறது-என்றாள்
சென்னிறத்தாளின் இம்மொழி கேட்டவன்
ஓடிவந்து உச்சிதனை முகர்ந்து
அவளை ஆரத்தழுவ
அப்போது படபடவென கதவொலி கேட்டது
பதறி எழுந்தாள் - அய்யோ
என்செய்வாள் அத்தனையும் கனவு!

எழுதியவர் : க.durgalakshmi (6-Nov-13, 2:52 pm)
பார்வை : 83

சிறந்த கவிதைகள்

மேலே