இன்றாவது விழித்திடு இசைப் பிரியா படுகொலை
ஐயகோ!என் செய்வேன்? ஏது செய்வேன்?
எப்படி நான் எடுத்துரைப்பேன்?
வன் சொல் பெரிதாய் இல்லை
வஞ்சக சிங்கள வெறி நாய்களை வைய...
பிஞ்சு முக வஞ்சி இவள்
கொஞ்சு மொழி பாடியவள்
நெஞ்சு உரம் ஏற்றியவள்
வஞ்சகத்தால் பலியானாள்
வலைதளத்தில் செய்தியானாள்...
புன்னகை தவழ் முகத்தோடு
கைதான இசைப் ப்ரியா
புண்பட்டு புழுதியில் புரண்டு
வன் கொடுமைக்கு ஆளாகி
வானகம் சென்ற கொடுமை
காணொளியில் கண்டபோதே
கண்கள் கலங்கிற்று
உடல் சில்லிற்று
உள்ளம் உறைந்திற்று
தமிழினம் தனி ஈழம் காண
தன்னுயிரை கொடுத்த இவள்
தமிழன்னை உருவன்றோ...
அவள் வெறி நாய்களிடம் சிக்குண்டு
ஆடைகள் உருவப் பட்டு
அங்கம் எச்சிலாக்கப் பட்டு
அலறி அபயக் குரல் எழுப்பி
ஆதரவின்றி மாண்டு போனாள்
தமிழ்த் தாயை காப்பது
தமிழன் தலையாய கடமை அன்றோ?
தமிழ் அன்னைக்காய் நீதி கேட்க
தயக்கம் காட்டுவது ஏன்?
தாமதம் நீ கொள்வது ஏன்?
நீ தாய் முளையில் குடித்த பாலும்
தந்தை வழி பெற்ற மரபும்
தரம் கெட்டுப் போனதோ?
தமிழ் மண்ணில்
தன்மான உணர்வுகள்
தரைமட்டமானதோ?
சுயநல அரசியலால் உன் சுரணை
சூறையாடப் பட்டதோ?
அன்று
வங்க தேசம் காண
வழி வகுத்த இந்திய அரசு
தமிழ் ஈழம் காண்பதற்கு
தடைக்கல்லாய் நிற்கிறது
தமிழினத் துரோகிகளிடம்
கைக் குலுக்க விழைகிறது
உன் இனம் காப்பதற்கு
உன் கைகள் இணையட்டும்
ஓங்கிய உன் உணர்வு முழக்கம்
உலகம் எங்கும் எதிரொலிக்கட்டும்
தன்மான உணர்வு
தமிழனுக்கு உண்டு என
தரணி இன்று காணட்டும்
கொற்றவையாய் கொதித்தெழுங்கள்
சிங்கள ஆட்சியை கருவறுங்கள்
முகத் திரண்டு கண்களும்
கோபக் கணல் தெறிக்கட்டும்
நான்கிரண்டு கைகளும்
வன்மை எதிர்க்க ஓங்கட்டும்
சிங்கமென வீறு கொண்டு திரண்டது தமிழினம்
வங்கக்கரையில் பிறந்தது தமிழ் ஈழம் என
வரலாறு நாளை சொல்லட்டும்
அமுதா அம்மு