உங்கள் விமர்சனங்கள் வரவேற்கபடுகிறது

எழுதும் நான் மட்டும் அல்ல,
எழுதப்பட்ட வார்த்தைகளும்,
எதிர்பார்க்கும்,
உங்கள் விமர்சனத்தை!

நம்மில் சிலர்,
விலை உயர்ந்ததையும்,
விலை இல்லாததையும்,
ஒன்றாகவே பார்க்கிறோம்,
ஆம்,
விலை உயர்ந்தது,
என்றால்,
இது நம் தகுதிக்கு மீறியது என்றும்,
விலை இல்லாதது,
என்றால்,
நம் தகுதிக்கு குறைவானது என்றும்!

பாராட்ட கூட,
நாம்,
நம் நண்பனாகவோ,
நம் உறவாகவோ,
இருக்க வேண்டும்,
என்று இருகிய மனதோடு,
இருப்பது சரியல்ல!

விமர்சிக்க பட்டால்,
மட்டுமே,
சமுதாயமும்,
அரசாங்கமும்,
சரிபடுத்த படும்!

உலகம் போற்றும்,
அறிவாளி நம்,
அருகில் இருந்தால்,
கூட,
அவனை அறிவாளி,
என்று,
நம்மில் சிலர் சொல்லமாட்டோம்!

ஆதாயம் தேடும்,
உலகில் அன்போடு,
பிறரை,
பாராட்ட கூட,
மனமில்லை நமக்கு!

சறுக்கி விழாமல்,
யாரும் சிகரம் தொட,
முடியாது,
உச்சம் தொட்டு,
மிச்சம் என்று ,
இருக்கும் உயிர் மட்டும்,
நெஞ்சம் எல்லாம்,
ஏங்குவது,
உங்கள் பராட்டுக்கே !!!


உங்கள் விமர்சனங்கள்

வரவேற்கபடுகிறது!!!

க.கார்த்திக்.

எழுதியவர் : ஷர்மி கார்த்திக் (6-Nov-13, 3:38 pm)
பார்வை : 56

மேலே