அடையாளம் தேடி
அழகாய் இருப்பதே,
சிலரின்,
அடையாளம் தான்!
ஆனால்,
அது,
எல்லோருக்கும் பொருந்தாது!
இங்கே,
தந்தை விட்டு சென்ற,
வீட்டிலேயே,
தான் சாகும் வரை,
வாழ நினைக்கும்,
சில மகன்களுக்கு,
சுயமாய்,
ஒரு அடையாளம்,
தேவைப்படுவதே இல்லை!
இன்னும் சிலர்,
தந்தையாக,
தான் ஆன பின்னும்,
தன் தந்தை பெயர்,
சொன்னாலே,
தன்னை தெரியும்,
என்ற அளவில்,
வாழ்ந்து இருப்பார்!
நல்லவன் கெட்டவன்,
என்பதே,
ஒருவனின் அடையாளம் தான்!
இஷ்டபட்டால் மட்டும்,
நமக்கான அடையாளம்,
கிடைப்பது இல்லை,
அதற்கான உரிய,
கஷ்டம் படாத பட்சத்தில்!
இங்கே பலருடைய,
அடையாளத்தை,
வேறு பலர் பறித்து,
கொண்டார்கள்,
அவர்களின் திறமையால்!
நம்முடைய,
அடையாளம் கூட,
நாளை வரும்,
நம் சந்ததிக்கு,
அவமானமாய்,
ஆகி விட கூடாது!
நட்புடன்............................
க.கார்த்திக்