விந்தை தேசம்

மலைச் சரிவினில் சிறு இடம்
பயிர்செய்ய தேடும் சில தேசம் .

மணல் வெளியில் ஒரு சுனை
மர நிழலுக்கு ஏங்கும் சில தேசம்

மாமர காடுகளின் பெரு நிழல் ஊடே
பயிரிட தவிக்கும் சில தேசம் .

மாறாத தரிசு நிலங்களின் மத்தியில்
உணவு விளைய போராடும் சில தேசம்

மணியாய் நெல் விளையும் பூமியில்
கல்நட்டு கோடுபோட்டு ரியல் எஸ்டேட்
வியாபாரம் செய்யும் நம் தேசம்.

எழுதியவர் : கார்முகில் (6-Nov-13, 4:44 pm)
சேர்த்தது : karmugil
Tanglish : vinthai dhesam
பார்வை : 96

மேலே