விழித்தெழு
முயன்றிடு தோழா
முடித்திடலாம் ..
வெகுண்டெழு தோழா
வென்றிடலாம் ..
இமயம் என்ன உயரம்
அதை தாண்டி உன் புகழ் உயரும் ..
நம்மால் முடியாதது இல்லை ,
நம் முயற்சிக்கு வானமே எல்லை ..
விதியை வெல்லும் மதி உனக்கு ,
விடியலை புதிதாய் நீ இயக்கு..
உன் வியர்வை துளியிலும்
தெரியுது புது இலக்கு...
நீ போகும் பாதையெல்லாம்
விடியலின் கிழக்கு..
தயக்கம் என்ன தோழா
தடைகளை உடைத்திடு !
விழித்தெழு தோழா
விடியட்டும் நல்வழி உன்னாலே .....