சென்று வா செவ்வாய்க்கு
ஒரு அரசியல் வாதியின் வாழ்த்து
===============================
சென்று வா ... மங்கல்யான் .....
செவ்வாய் கிரகத்துக்கு சென்று வா ....
மணல் அல்ல இங்கு ஆறுகள் இல்லை
மலையை திருட மலைகளும் இல்லை
ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய
இங்கு இடங்களும் இல்லை
இவை எல்லாம் செய்ய அங்கு இடம்
உள்ளதா என்று கண்டு வந்து சொல்.
மனிதர் இருந்தால் எத்தனை ஒட்டூ
தேரும் என்று வந்து சொல்.
அதில் எத்தனை ஜாதிகள் இருக்கிறது
என்று வந்து சொல்.
தனி வீடு செட்டப்பு வைத்து இங்கு
ரொம்ப போர் ஆச்சி - அதனாலே
செவ்வாயில் ஒரு தனி சின்ன வீடு
வைப்போம் - அந்த வசதி இருகிறதா
என்று வந்து சொல். சென்று வா
மங்கல்யான் செவ்வாய் கிரகத்துக்கு
நான் சொன்ன செய்தி எல்லாம்
கொண்டு வா இம் மண்ணுலகிற்கு !