ஒரு கவிஞன் காதலனாகிறான்
இரவெல்லாம் தவமிருந்து
ஒற்றைத்துளியை
சேகரிக்கும் புல்வெளியை,
பனித்துளியில் ஒளிந்திருக்கும்
வெள்ளை ஒளியை ரசித்திருந்தான்!
உதிர்ந்து போகும்
மலர் கண்டால் அழுதிடுவான்!
உயர பறக்கும்
சிட்டுகுருவி கண்டால் சிரித்திடுவான்!
பூக்களை பறிப்பதும்
புற்களை மிதிப்பதும்
பெரும்பாவம் என்றிருந்தான்!
மலைச்சிகரம் ஒன்றின் மேல்
குடிசை கட்டி
பூக்களை ரசிப்பதே இலச்சியம்
என கொண்டிருந்தான் !
பூக்களை புசித்தே பழகிய தேசம்
கவிஞனை கல்லறைக்கு ஒப்பிட்டது!
சில்லறைக்கு வந்த சிநேகிதம் கூட
தள்ளி நின்று நகைத்தே சென்றது!
பூக்களை
ரசிக்க தெரியாதவனோடு
விழகியே வாழ்ந்தான்!
இந்த கவிஞன்
எப்போது காதலனானான் ?
இவன் கல்லுரி வசந்ததில்..!
கோடிபூக்களின் சிரிப்பை
ஒரு புன்னகையில் ஜெயித்தாள்!
இவன் கவிதை கண்டு
புன்னகை உதிர்த்து
ஆஸ்கார் விருதை கொடுத்தாள்!
பூவை ரசிப்பதே
பொழுதே கொண்டவன்
அந்த பூவையை ரசிப்பதே
பொழுதாய் கொண்டான் !
ரோஜாவை அழகில்லை என்றே
அவமதித்தான்!
அவள் கிறுக்கி கொடுத்தாலும்
கவிதை என்றான்!
அவள் விழி ஒளி படும்போதெல்லாம்
நயாகரா அருவியில் குளித்தான் !
அவள் மடி சாய்ந்து
மரணம் என்றாலும்
சுகமென்றான்!
ஓரிரு வார்த்தை பேசியிருப்பான் !
என்றோ ஓர்நாள்
சிரித்திருப்பான் !
சிலந்தி நூலிழை போல்
நட்பு பின்னியிருந்தது !
காதலை சொல்லி
நட்பை சிதைக்க விரும்பவில்லை!
இன்றோடு பிரிந்து போகிறோம்!
மூன்றாண்டு வசந்தம்
முடிந்து போனது!
ஆட்டோகிராப் வாங்கி
அழுதே விட்டான் !
இரவெல்லாம்
தூங்கமறந்தான்!
விடிந்து விட்டதை
கிழக்கு சொன்னது !
ஒற்றை ரோஜா
இவனை அழைத்தது!
ரோஜாவின் முகத்தில்
ஒருதுளி கண்ணீர்!
காதலன் மீண்டும் கவிஞனாகிறான் !
* * *