வர்ணம்

பெண்ணே நான் கண்டேன் - உன்
கண்ணில் இட்ட மைய்
அது காட்டிய வெட்கம்
இதழில் விதைத்த புன்னகை
பூமியில் பதித்த இரு விழிகள்

வானம் பார்த்த பூமியென
நான் நிற்க
வானில் பறக்க வைத்தாய்
இறக்கை கட்டி....
நீ அல்லவா என் வானும் ....
என இரு கைகளும் உனை கட்டி

உன் மொழி என்னக்கு தேன்கிதம்
நீ தேன் மொழி என்பதாலோ
வண்டுக்கு தேன் மேல் ஆசை
என்னக்கு உன் (மொழி) மேல் ஆசை

உன் மேனி தங்கம் என மின்ன
மேகம் பொழிந்ததடி
பால் மழை

உன் பட்டு மேனி போர்த்த
பட்டுப் புச்சி யின்றதடி - பட்டு
உடை தினம் ஒன்று உன்னக்கு

பூக்கல்லுக்கோ உன்னை கண்டால் பொறாமை
நீ சுடியபோதும் அது வடியதில்லை
பொறாமை என்னக்கு என்பேனோ
நான் உன்னக்கு சுடாததால்

கண்ணன் விரல்கள் காற்றை போல் - உன்
கார் மேகக் கூந்தல் இடை சென்று
புல்லாங்குழல் இசைத்தன
இசை சுகம் என்பாயோ

வெற்றிலை போல் கைகள்
அதில் நீ ஊட்டிய சோறு
என் நா சிவக்க வைத்ததடி
என்ன ருசி என ரசித்தேன்
என்னை மறந்து

பூ போன்ற கால்களில்
நீ அணிந்த கொலுசு
என்னை அழைபதற்கோ என்று
நீ வருகின்ற பொழுது
பொழுதின்றி திரும்பி பார்கின்றேன்
உன் காதல் ஓரப்பார்வையில்
நான் எரிகின்றேன்

உன்னை எண்ணும் பொழுதெல்லாம்
நான் கவிதை மட்டும் எண்ணுகின்றேன்
என்னை என்ன செய்தாயடி
என்னை என்ன செய்தாயடி..............

எழுதியவர் : கண்ணன் - வெற்றிக் கண்ணன் (8-Nov-13, 7:05 pm)
சேர்த்தது : VK
Tanglish : varnam
பார்வை : 82

மேலே