பரிமளத் தங்கமே
அக்காலத்தில் அணிகலனாய்
வந்தவளே....
இக்காலத்தில் ஆடம்பரப் பரிசுப் பொருள்களில் ஒன்றானாய்.....
கடைகோடி மக்களும் ஏங்குகிறான்
உன் வருகைக்காக........
கரம் பிடிக்க வருபவனும்
மதிப்பிடுவது உன்னைத் தானே........
உன்னில் தான் எத்தனை எத்தனை
பரிமாற்றங்கள்.......
நிட்சியித்த பெண்ணை நிதமும் நினைக்க
மோதிரமாய் உறுவெடுதாய்.....
இருமனங்களை ஓர் மனமாக்கி
ஆனந்தப்பட்டாய் திருமாங்கல்யமாய்.....
நவரத்தினங்களும் ஏங்குவது
உன்னுடன் உறவாடத்தானே.....
எத்தனையோ பரிமாற்றங்கள்
உன்னில் வந்தாலும்......
உன்மீது கொண்ட மோகம்தான்
குறையவில்லை எங்களுக்கு......
ஓசைப்படாமல் ஆள்கிறாய்
இவ்வுலகை........
எம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும்
வீழ்ச்சியையும் நிர்ணயிப்பதில்
உனக்கும் பங்குண்டே........