அசின் திரிஷா

பூவிடம் பேசுகிறேன்,
மழையுடன் சங்கமிக்கிறேன்,
நதியோடு நலம் விசாரிக்கிறேன்,
கடல் அலையில் இசை கேட்கிறேன்,
புல்வெளி பனி,
நோக்கி செடியில் புதைந்து,
போகிறேன்,
வானவில் வர்ணத்தில்,
வர்ணஜாலம் செய்கிறேன்,
செடி கொடியோடு,
சேர்ந்து நிற்பதால்,
என்னை முட்டாள்,
என்கின்றனர் சிலர்,
அது சரி,
இயற்கையை நேசிக்க,
தெரிந்த நான்,
முட்டாள் என்றால்,
இருந்து கொள்கிறேன்,
முட்டாள் கவிஞனாய்!!!

எழுதியவர் : கார்த்திக் (9-Nov-13, 6:49 pm)
பார்வை : 209

மேலே