மனதை தொட்ட வரிகள்

மனதை தொட்ட வரிகள்

நான் ஒரு பெண்ணுடன் நட்புடன்
பழகி வந்தேன். அந்த
பெண்ணுக்கு திருமணம்
நிச்சயமானபின் மூக்குத்தி அணிய
தொடங்கினாள். அதுவரை நான் பார்த்த
அவளுக்கும் மூக்குத்தியுடன் பார்த்த
அவளுக்கும் நிறைய வித்தியாசமாக
தெரிந்தது. அவ்வளவு அழகாக
தோன்றினாள்.

நீ முன்பே மூக்குத்தி அணிந்திருந்தால்
நானே உன்னை பெண்
கேட்டு வந்திருப்பேன்
என்று அவளிடம் கூறினேன்.
அதற்கு அவள் சொன்ன பதில்
வாழ்நாள் முழுவதும் மறக்க
முடியாததாக அமைந்துவிட்டது.

"நீ முன்பே சொல்லியிருந்தால் நான்
அணிந்திருப்பேனே"

எழுதியவர் : ஜில்லுனு ஒரு ஷாகுல் (10-Nov-13, 3:34 am)
பார்வை : 3423

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே