என் மனைவி

எனக்காக பிறந்தாள்,எங்கயோ வளர்ந்தாள்
ஒரு நாள் அவள் என் துணைவி ஆனாள்
ஒரு அளவும் இல்லாமல் அன்பை அள்ளி கொடுப்பாள்
அவள் காட்டும் அன்புக்கு ஈடேது ?

என் மௌனத்தின் மொழி அறிந்தவள்
என் முறைப்பின் வலி உணர்ந்தவள்
என் வார்த்தைக்கு உயிர் தருபவள்...
அதிகமாய் பேசாமல் ஆதரவாய் பேசுபவள் ...
என் ருசிக்கு சமைத்து
பசிக்கு பறிமாறுபவள்...

அவள் சிந்தும் புன்னகை, அதுவே அவள் நகை
அவள் முகத்தில் சினம் நான் கண்டதில்லை
அவள் மனம் மிருகமாய் நான் பார்த்ததில்லை
அவள் என் நிழலே, என் தேவைகள் அறிவாள்
அவள் என் உள்ளம் நன்றாக அறிவாள்
அவள் என் மந்திரி,ராணியும் ஆவாள்
வாழ்க்கை படகோட்டும் நல்ல ஒரு படகோட்டி

நலமில்லா போது என் தாயாக மாறுவாள்
ஆறுதல் கூறி எனக்கு ஊக்கம் அளிப்பாள்
அவள் ஒரு தேவதை , என் குடும்ப தாரகை
குடும்ப பெருமைக்கு வழிகாட்டி

எங்களது சண்டை எனது முறைப்பில் ஆரம்பித்து
மௌனத்தில் தொடர்ந்து பேச்சில் முடிந்து விடும் ...

அல்லது அவளது மௌனத்தில் ஆரம்பித்து
தவிப்பில் தொடர்ந்து பேச்சில் முடிந்து விடும் ...

மொத்தத்தில் அவளில்லாமல் நானில்லை ...

எழுதியவர் : (10-Nov-13, 1:43 pm)
பார்வை : 104

மேலே