பொம்மைகளின் ஏக்கம்

பள்ளிக்கு செல்லும்
என் மகளுக்கு காலுறை அணிவதை கண்டதும்
தம் தம் கால்களை குனிந்த பார்க்கின்றன
என் எல்லா பொம்மைகளும்
அணிந்து விடுவதில் எனக்கொன்றும் சிரமில்லை…
அத்தனை பொம்மைகளின்
கால் அளவுக்கும் ஏற்ற
காலுறைகள் கிடைக்க வேண்டுமே !

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (10-Nov-13, 1:52 pm)
சேர்த்தது : amsaraj
பார்வை : 65

மேலே