சொல்லிட்டு போடி

பறந்து செல்ல பரிதவித்து
நான் இலவம் பஞ்சாய் ஆனதென்ன
பாவி உன்னை பார்க்கவேண்டி
நான் பைத்தியமாய் போனதென்ன

ஆறு அடி ஆம்பள நான்
ஒரு நொடியில் குழந்தையானேன்
உன் காதோரம் கதைக்க வேண்டி
கனகாம்பரமாய் நான் பிறப்பேன்

தாவணியில் நீ வந்திட
தவங்கெடந்து தவிக்கிறேனடி
தங்க கொலுசு ஒன்னை மாட்டிவிட
தாறாய் உருகுறேனடி

முந்தானையை இடுப்பில் சொருகி
எனக்கு முந்தி போறவளே
உன் நெஞ்சுக்குழி ஓரத்துல
என்ன சொருக மாட்டியோடி

பட்டுப்பூச்சி பல கொன்னு
பட்டுப்புடவ வேண்டாமடி
ஊ நு சொல்லு ஒட்டிக்கிற
உன் மானங்காக்க போரந்தவண்டி

காத்துல பறக்கு கூந்தல
கணக்கெடுத்து கரையுரேனே
இந்த கட்டபொம்மன கட்டிக்கிறேன்னு
ஒரு குட்டி வார்த்தை சொல்லிட்டு போடி

எழுதியவர் : ரா. ராஜ் நாராயணன் (10-Nov-13, 6:10 pm)
Tanglish : sollittu podi
பார்வை : 186

மேலே