என் மூன்று வரி கவிதை தொகுப்பு

தெருவில் கண்கள் மோதின .....!!!
உடனே இதயம் குளிர்ந்தது ....!!!
உயிர் மெல்ல மெல்ல இறக்குதடி
**************
காதலில் பாத சுவடை
சமமாக வைத்தவர்கள்
காதலில் தோற்பதில்லை

*******************
நான் காதல் விளக்கு
காதல் திரி காதல் நெய்
நீ வெளிச்சமாக இரு போதும்

******************

நீ நடந்து போகிறாய்
நான் பறந்து வருகிறேன்
இதயம் சிரிக்கிறது ...!!!

*****************

காதல் ஒரு சேலை
அளவாக இருந்தால் அழகு
அளவு மீறினால் கிழிஞ்சிடும் ...!!!
பணம் செலவழித்தால் சேமிப்பு
குறையும் -மனம் செலவழித்தால்
காதல் அழகு பெறும் ...!!!

************************

நீ என்னை காதலிப்பாய் என்றால்
நான் என்னை உருக்க தயார்
ஆனால் உருக்கி விடாதே ...!!!

*************

தனிமையை துரத்தி
இனிமையை தந்து
வாழ்க்கையை தந்தாய்

*******************

நீ மகுடியாக இரு
நான் பாம்பாக இருக்கிறேன்
காதல் ஓசையாக இருக்கட்டும்
*****************

நீ அழகான பூ
நான் மகரந்தம்
காதல் தேன் குருவி

எழுதியவர் : கே இனியவன் (10-Nov-13, 4:34 pm)
பார்வை : 103

மேலே