திசை மாறும் பறவைகள்

புண்பட்டுப் புண்பட்டு மனம்
பண்படவேண்டும்.
தென்பட்டுத் தென்பட்டு ஞானம்
திறம் பெற வேண்டும்.

ஞானம் மனத்தில் பட்டுப் பட்டு
ஊணும் பதிவுகள்.
வேணும் போதில் தொட்டுத் தொட்டு
தோணும் அனுபவங்கள்.

அறியும் அனுபவம் புரியுப் புரிய
மனமுங் கூடும்.
குறுகும் விரசம் சுரியச்சுரியும்
நிகழ்வாலே!

வளரும் பருவம் உணர உணரும்
சம்பவங்கள்.
பழகும் சமுகம் குணத்தில் குணமும்
பலவிதங்கள்.

பாரம் பர்யம் தீவிரம் தீவிரமே!
வாதம் தானது.
தீரம் ஆனவர் அதிலே அதிலே!
தீவிரர் ஆகிறார்.

நீதி அதனைக் கொன்று கொன்று
நீதிக் காப்பதோ!
அநீதி தானும் வென்று வென்று
அதுவும் ஈனுமோ!

பறவைக் கூட்டம் எங்கே எங்கோ
திசைகள் மாறுமோ!
உறவுத் தேட்டம் பிரிந்து பிரிந்தே
ஊனம் ஆகுமோ!

பறவை பலவும் தேடும் தேடல்
பலப்பல பலவே!
உறவில் எல்லாம் கூடும் கூடல்
ஒன்றே ஒன்றே!

உறவுகள் நமக்குள் ஒன்றே ஒன்று
உணர்வில் கலந்ததே!
உணர்வில் இருப்போம் அவரே அவரே
உறவில் இணைந்தோரே!


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (11-Nov-13, 4:13 am)
பார்வை : 201

மேலே