மறதி வேண்டும்

மறதி ஓர் உன்னதமான பரிசு!
இப்போது அதை பெற கடினமாக முயற்சி செய்கிறேன்.
ஆனால் முடியாமல் தோல்வி அடைகிறேன்.
என் மறதியும் மரத்து போகிறது,
உன் நினைவுகளின் சுகத்தில்.....
மறதிக்காக நான் செல்லும் பாதை முழுக்க
உன் நினைவுகளே அடையாளங்களாகின்றன,.......
மறதிகள் மற்றும் நினைவுகளின் பலம்
மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது....
என்னிடம் அவள் நினைவுகளின் பலம் அதிகம்,
அவளிடம் என் மறதிகளின் பலம் அதிகம்....
உன் நினைவுகளின் வெப்பத்தில்
என் மறதிகள் பதங்கமாகி விடுகின்றன.....