ஒரு தலைவனின் வீரம் - நீ புலியாய் பிறக்கமாட்டாய்

கண்களில் ஆயிரம்
கனவுகளின் தேக்கம்
இன்றாவது விடியுமா வாழ்வு
இருண்ட போதெல்லாம்
நினைக்கும் மனம்

அடுத்த வேளை உணவு
கிடைப்பதோ அரிது
ஆகாயத்தை பார்த்தபடி நாங்கள்
விழுவது உணவா இல்லை
அணுவா அச்சுறுத்தும் ஆகாயம்.

பூக்களுண்டு எங்கள் பூமியில்
பூவையரோ
விதவை கோலத்தில்
புன்னகை மறித்து
வாடிவிடும் பூக்கள் .

திருத்தலம் இடிக்கப்பட்டது
திருமாலும் புதைக்கபட்டார்
கடவுள் துகள்களாக
அவர் கடவுளாய் இல்லை
இப்போது கற்சிலையும் இல்லை

எம் விளைச்சலில் மட்டும்
தீ விழுகிறது
எம் கண்ணீரில் இங்கே
அரசியல் விளைகிறது
கண்ணீரோடும் பசியோடும் நாங்கள்

என்ன கேட்டோம்
சுதந்திரமாய் ஒரு காற்று
எங்களுகென்று ஒரு தேசம்
என் பாட்டன் நிலத்தில்
மறுப்பதும் மண்டியிட சொல்வதும் முறையோ ?

பல விதைகளை இட்ட
ஆலமரம் சாய்ந்தது
ஒதுங்க நிழல் இல்லாது
தளராமலும் தாளமலும்
காத்திருக்கிறோம் ஆல விதைகளின் வளர்சிக்கக்காக

வளரும் என் தேசம்
வாழையெடி வாழையாக கால போக்கில்
உன் கையில் மாறியது போல்
ஒருநாள் எம் கைளும் - கவலை படாதே
அஞ்சாதே - அப்போது

உன் தாய் மாரருக்கபடமாட்டாள்
மனைவி கற்பழிக்கபடமாட்டாள்
சகோதரி அம்மனமாக்கபடமாட்டாள்
சகோதரன் உயிரோடு தோலுரிக்கபடமாட்டன்
குழந்தைகளை குண்டுகள் துளைக்காது
கர்ப்பிணிகளை கருவருக்கமாட்டோம்
அங்கே தோட்டாக்களின் சத்தம் இருக்காது
அந்திவேளையில் அணுக்களை விதைக்கமாட்டோம்
அகதியாய் அலையமாட்டாய்
நீ புலியாய் பிறக்கமாட்டாய்...

-Jagakutty

எழுதியவர் : ஜெகதீஸ்வரன் C (11-Nov-13, 9:30 pm)
சேர்த்தது : jagadeeshwaran
பார்வை : 111

மேலே