செயற்கை மீறுகிறது இயற்கை சீறுகிறது

செயற்கை மீறுகிறது இயற்கை சீறுகிறது.
இயங்கும் கோளது பயந்து காய்கிறது.
பயக்கும் பருவங்கள் பாதை மாறுகிறது.
வியக்கும் விஞ்ஞானம் விண்ணில் ஆய்கிறது.
ஜெயம் யாருக்கு நரைக்கா? இறைக்கா?
கொத்துக் கொத்தாய் உயிர்கள் கொள்ளை.
கொண்டு போகிறது கடலுக்குள் வெள்ளை.
இத்து இத்துச் சரிக்கிற பூகம்பத் தொல்லை.
இதற்கெல்லாம் விடிவுகள் எதுதான் எல்லை?
இயற்கை ஆறிட ஏது வழி சொல்லே!
அழிவு அழிவு என அன்றாடம் ஆருடம்,
அப்படி இல்லை என அப்புறம் தேறுடம்.
மொழியும் அறிவும் முன்பின் முரண்படும்
இயற்கை எதிரான எல்லாமே அழிபடும்.
எப்படி ஆகுமோ என்பதே உடன்படும்.
வசதிகள் பெருக்கி வாழ்ந்து பழகினோம்.
இசைந்து தெளிந்திட அறிவினில் விலகினோம்.
விசைகள் முடுக்கி விரைந்து உலவினோம்.
நசைகள் அடுக்கி முனைந்து கலவினோம்.
வசைகள் தொடுக்கும் இயற்கை அலவினோம்.
இப்போதும் இயற்கை சொல்வது எச்சரிக்கைதான்.
எச்சரிக்கைக் கூட நாளுக்கு நாள் உச்சறிக்கைதான்.
நூறுகளாய் விளைந்த சாவுகள் ஆயிரங்கள்தான்.
ஆயிரங்கள் லட்சங்கள் பெருகிக் கோடிகள்தான்
அப்புறம் ஊழிப் பெருவழியில் ஒரே நாளில்தான்.
உணர்வீர் மானுடமே உணர்வீர் இது தருணம்.
உணங்கி உயிர்கள் வாழ குளிர்ந்த கோளம்.
அணங்காய் மிளிர்ந்த அழகிய பூதலம்
பிணங்கி மீண்டும் வெப்பம் ஏறினால்
இனங்கள் மாண்டும் காடாம் சீறினால்.
கொ.பெ.பி.அய்யா.