இரு ஆன்மாக்களின் நினைவுகள்

பிறப்பால் பிரபஞ்சத்தைப் பார்த்தோம்
பிள்ளை பருவத்தால் பிதாவை அறிந்தோம்..!

அன்னையால் அன்பை கற்றோம்
பள்ளியில் பாடத்தை பெற்றோம்..!

விளையாட்டால் விந்தை அறிந்தோம்
அறிவால் ஆண்டவனை அடைந்தோம்..!

பாசத்தால் பகைமை மறந்தோம்
கல்லூரியில் கவிதையைத் திரிந்தோம்..!

பரிட்சையால் படிப்பைக் கற்றோம்
மதிப்பெண்ணால் மதிப்பைப் பெற்றோம்..!

திருமணத்தால் திருப்பம் கண்டோம்
வேலையால் வேகம் கொண்டோம்..!

பணத்தால்ப் பாசம் மறந்தோம்
சினத்தால் சீறல் கொண்டோம்..!

வார்த்தையால் வாதங்கள் செய்தோம்
சந்தேகத்தால்ச் சங்கடத்தை பெற்றோம்..!

அவசரத்தால் ஆவேசம் அடைந்தோம்
விஷத்தால் விடைப்பெற்றுக்கொண்டோம்..!

பின்பு..,

நினைவால் நிஜத்தைப் பெற்றோம் அதனால்

இன்று...,

நிம்மதியாய் நிறைவாழ்வை
நோக்கிச் செல்கிறோம்...!
ஆன்மாக்களாய்....!

எழுதியவர் : ஜென்னி (12-Nov-13, 12:17 pm)
பார்வை : 165

மேலே