காலடியில் புதையல்
தேடும் பொருளே,
தேடல் கொண்டது,
போகும் பாதை,
நீந்து சென்றது,
ஆவல் மனதினை,
ஆட்டி படைத்தது,
காவல் தெய்வங்கள்,
காட்சி அளித்தது,
காலம் புது விட,
கோலம் போட்டது,
நாளும் அதன்படி,
நகர்ந்து சென்றது,
உடல் வருத்தியே,
உருவம் தேய்ந்தது,
உயிர் மட்டுமே,
கர்வம் கொண்டது,
வேதம் தவறென்று,
வாதம் நடந்தது,
பூதம் வேண்டியே,
பூஜைகள் நடந்தது,
கடல் நீர் உப்பென்று,
கண்ணீர் சொன்னது,
மடலுக்கு மைய்யாய்.
செந்நீர் ஆனது,
திடம் கொண்டு நெஞ்சம்,
வேங்கை ஆனது,
இடம் பெயர் பொருளாய்,
இதயம் ஆனது,
சிற்ப கலையிலும்,
நுட்பம் குறைந்தது,
அற்ப மானுடம்,
ஆருடம் சொன்னது,
கல்வி பயிள்விலும்,
கண்ணியம் குறைந்தது,
கலவி பயிர்பிடம்,
ஆகியே போனது,
மூடர் கூடங்கள்,
கூடியே போனது,
மாதர் இழிவுர,
காரணம் ஆனது,
பாதம் அடியிலே,
புதையலும் இருக்குது,
பார்வை தெளிவின்றி,
அலைந்து திரியுது!!!