கொஞ்சத் தூண்டும் பிஞ்சுப் பாதங்கள்

பிறந்த குழந்தையின்
பிஞ்சுப் பாதங்கள்

காலைத் தென்றலில்
ரோஜாப் பூக்கள்...!

கவிதை பிறக்க
இனி ஏன் பஞ்சம்...?!

காலையே உன்னிடம் நான்
அடைந்தேன் தஞ்சம்...!

புல்வெளியே விரித்திடு
பூக்களால் மஞ்சம்... இனி

புறப்படும் தமிழ்கவிதை இப்
பூவுலகை விஞ்சும்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Nov-13, 5:55 am)
பார்வை : 119

மேலே