சிந்திக்கா மரணம்
பலூனில் அடைபட்ட,
காற்றுக்கும்,
மனித உயிருக்கும்,
ஒரே தன்மை,
இரண்டும் வெளிப்படும்,
தருணம்,
யாரும் அறியாதது!
நாடறிந்த நடிகை அவள்,
விபத்தொன்றில் சிக்கி,
முகம் சிதைந்து,
மூச்சு அடங்கி,
போனாளே,
கடைசி கணக்குக்காய்,
எமனிடம் போனவள்,
அழகென்றால் நான்,
என்பர்,
அழகு முகம் எனதென்பர்,
முகம் சிதைந்து,
உரு குலைந்த,
மரணத்தை,
ஏன் தந்தாய்?
இது தான் வாழ்வென்றால்,
இருந்திருப்பேன் இயல்பாக,
அழகு திமிர்,
எனக்கு உண்டு,
ஆட்டி வைத்தேன்,
அது கொண்டு,
எல்லாம் என்னாச்சு,
என் வாழ்க்கை மண்ணாச்சு,
என்றாள்!
அரசியல் தலைவர்,
அவர்,
அனைவர்க்கும் தெரிந்தவர்,
அவர்,
வயது ஒன்றும்,
பெரிதில்லை,
வரவுக்கும் பஞ்சமில்லை,
நெத்தி பொட்டில்,
சுட பட்டு,
போனாரே உலகம் விட்டு,
கேட்பதற்கு கேள்வி,
உண்டா,
கேட்டாரு எமன் இப்போ,
பினாமிய பீரோ ஆக்கி,
போட்டு வச்சன்,
பணத்த எல்லாம்,
செலவாக்க நினைக்காம,
சேர்த்து தான் வச்சேனே,
கொள்ளடிச்ச பணம்னாலும்,
நெல்லடிச்ச பணம்முனு,
சொல்லியே வந்தேனே,
இப்படிதான் ஆகும்னு,
அப்பவே தெரிஞ்சிருந்தா,
சேர்த்திருக்க மாட்டேனே,
பாவ பணத்தை!
பெண்களுக்கு மட்டுமே,
அருள் புரியும்.
ஆனந்த சாமி அவர்,
தொலைக்காட்சி பெட்டியில்,
தினம் வந்து அருள் கூறுபவர்,
பேதை மீது,
மோகம் கொள்ளும்,
தெய்வீக சித்தர் அவர்,
விச பாம்பொன்று,
தீண்டிடவே,
விதி முடிந்து போனாரே,
நல்லது தான்,
நடந்தது என,
மக்கள் எல்லாம்,
நினைச்சாலும்,
சாமிக்கு மட்டும் தான்,
சங்கடமாய் இருந்துச்சு,
தப்பெல்லாம்,
செய்து விட்டு,
சாமி நான்,
என்றதுக்கு,
தண்டனை இதுன்னு,
புத்திக்கும் உரைச்சிச்சு!
எமன் பார்த்த,
பார்வையிலே,
ஏழை ஒருவனும்,
அங்கிருந்தான்,
உன் கவலை,
நீ சொல்லு,
என்று தான்,
எமன் கேட்க,
கவலைன்னு ஒண்ணும் இல்ல,
நேத்து வரை,
வேலை செஞ்சேன்,
நிம்மதியா உறங்கி,
இருந்தேன்,
கஷ்ட நஷ்டம்,
இருந்தாலும்,
கண்ணியமா வாழ்ந்து,
இருந்தேன்,
சொல்வதற்கு ஒண்ணும் இல்ல,
சோகம் அது எனக்கு இல்ல!
முடிகின்ற வாழ்க்கை தனை,
நினைச்சாலே,
போதுமே,
தப்பெல்லாம் குறையுமே,
நம்,
தரணியிலே!!!