vazhkai
எது வாழ்க்கை ?
போட்டியுடன் பள்ளிப் படிப்பு
காதல் என்று சொல்லிக் கொண்டு கல்லூரிக்களம்
ஜோலிக்கு வந்ததும் ஜோடியைத் தேடி
வம்சத்தைப் பெருக்கப் பிள்ளைகள் பெற்று
வயதான பின்னால் பழைய கதை சொல்லி
விதி வந்தால் சாவோம் என்று இருப்பதா
வழக்கை?
வாழும் நாள்களில் வறியவர்க்கு பொருள் நல்கி
வஞ்சம் இல்லா நெஞ்சத்துடன்
நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பதே
வாழ்க்கை.