நீ இல்லாமல் நான்

இரவு நேர மெல்லிசை நீயானால்...
காலை நேர கதகதப்பு நீயானால்...
தலைகோதும் இளந்தென்றல் நீயானால்...
போதும் போதும் அதுபோதும் ...
அலைமோதும் என் நெஞ்சம் எப்போதும்...
உள்ளம் எங்கும் உன் நினைவுகள் தானே...
கண்கள் முழுவதும் உன் கனவுகள் தானே...
பிரிவும் ஒரு சுகம் தான்...
சுகமான சுமை தான் ...
அது இதமான வலி தான் ...
உணர்கிறேனடி என் அன்பே...
எங்கோ உன் பெயர் கேட்க,
ஒரு நொடி உன்னை நினைத்து
எனக்குள் சிரிக்கும்
இனிமை எனக்கு போதுமே ...
பூமியை பெண் என்று சொன்னார்கள்...
ஏன் என எனக்கு தெரியாது..!
ஆனால் ...
மழை விட்டு ஓய்ந்த நேரங்களில்
மண் வாசத்தில்...
பெண் வாசத்தை...
உன் வாசத்தை ...
உணர்கிறேனடி அன்பே...
உனக்கு பிடித்த பாடல் வரிகளை
மனபாடம் செய்தேன்...
அதை பலமுறை எனக்குள் சொல்லி பார்த்து
ரசித்து பார்த்தேன்...
பொறா மை கொள்கிறேன் அந்த கவிஞன் மீது...
உனக்கு பிடித்த பாடல் வரிகளை படைத்தானே ...!
உன்னை பற்றி எண்ணிகொண்டிருந்தால் ...
இமைகள் கூட இமைக்க மறக்கின்றது ...
உயிரும் கூட கனக்கின்றது...!
எங்கும் உன் முகம்...
சுவாசமெல்லாம் உன் வாசம்...
எதிலும் உன் நினைவுதானடி,
ஏனடி பெண்ணே ஏனடி...
தனிமையில் நான் நடக்க ...
துணையாய் உன் நினைவிருக்க ...
மனசெல்லாம் உன் பிரிவு ஒலிக்குதடி...
மனம் வலிக்குதடி...
நீ எனக்கு நடந்த மாற்றமா ? ஏமாற்றமா ?
நீ என் வாழ்வில் வீசிய பூங்காற்றா ? புயல் காற்றா ?
==> நிலவின் நண்பன் (சிவகிரிதரன் 14-11-2013)