ஒரு வழவழாக் கவிதை

வாழ்க்கை ஒரு வாழை
வாழையடி வாழையாய் தொடரும்
வாழைப்பூ கசக்கும் உடலுக்கு நல்லது
வாழைத் தண்டு வெண்மையானது
மென்மையானது சுவையானது
வாழைத் தண்டு ரசம்
சிறுநீரகத்தை சிறக்க வாழச் செய்யும்
வாழை இலை சாப்பிட
இயற்க்கை தந்த இலவசத் தட்டு
வாழை நாரில் பூ தொடுக்கலாம்
பாக்கி என்ன இருக்கு அண்ணே ? ஆங்
வாழக்காய் கறி அருமைச் சுவை
பழுத்தால் வாழைப் பழம்
உரித்துச் சுவைத்தால் இனிக்கும்
மலச் சிக்கல் நீக்கும்
உரித்த வழ வழ வாழைப் பழத் தொலியை
விட்டெறிந்தால் வீதியில் சென்று விழும்
வழுக்கி விழுந்தவனைப் பார்போருக்கு
ஆனந்தம்
விழுந்தவனுக்கு அழகிய நர்சின்
பாராமரிப்பில் ஆஸ்பத்திரியில் சுகவாசம்
ஆரோக்கிய நல வாழ்வு தரும்
வழ வழ வாழைப் பழமே !
வழ வழ வாழைப் பழத் தொலியே !
வாழிய வாழிய வாழியவே !
~~~கல்பனா பாரதி~~~