தியாகம்-2
வணக்கம் வாசகர்களே!
தியாகத்தை தொடருவோமா...................?
முதல் இரவு!
காமாட்சி பலவித ஆசைகளுடன் ,எண்ணங்களுடன் தன் அறையில் நுழைகிறாள்! காவியன் அமைதியாக இருக்கிறான். இவள் அருகில் அமரும் போது காவியன் கண்களில் கண்ணீரை பார்த்து திடுக்கிடுகிறாள்.,
ஏங்க, ஏன் அழுறிங்க? என்ன உங்களுக்கு பிடிக்கலையா.,
நா,என் அம்மா விருப்பத்துக்காக தான் உன்ன கல்யாணம் பண்ணிகிட்டேன்.,ஆனால் உன்ன பார்த்ததும் பிடிச்சு போச்சு. இப்ப அது பிரச்னை இல்ல! என் அப்பா இறந்து ஒரு மாசம் ஆகிருக்கு,என்னால அதுல இருந்து மீள முடியல,எனக்கு கீழ இருக்க தங்கை,தம்பிய எப்படி கரைஏத்த போறேன்னு தெரியல காமாட்சி, என்ன பண்ண போறோம்னு தெரியல., என்று சொல்லி கண்ணீர் வடிக்கிறான்!
இவள் நிம்மதி பெருமூச்சுடன்,
என்னங்க,கஷ்டம்ன்றது எல்லாருக்கும் இருக்கும், என் வீட்ட எடுத்துக்கங்க.,நான் 5ஆவது பொண்ணு.,
எனக்கு கல்யாணம் ஆகலியா? இதும் உங்களுக்கு திருப்தி இல்லனா இன்னொன்னு சொல்றேன்.,
நான் கடைசி வர உங்க கஷ்ட நஷ்டத்துல பங்கு எடுத்துப்பேன்.நாம கண்டிப்பா நல்லா இருப்போம்.,முன்னேறுவோம்.,
சில நாட்களுக்கு பிறகு ,காவியனின் கஷ்டத்திற்கு தன் 5 பவுன் நகையை மனமுவந்து கொடுக்கிறாள்.,
அதை வைத்து ஒரு இரும்பு தொழிலை ஆரம்பிக்கிறார்.,தன் கடனைஎல்லாம் அடைத்து தம்பி,தங்கைகளை கரையேத்தி........................., இப்பொழுது சொந்த வீடுடன் ,இதோ............... ...........
தனக்கான வாழ்கையை,காமாட்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
காமாட்சியின் நகை முதலீடாக இருந்ததாலும், அமைதியான,பொறுமையான குணத்தினாலும் காவியனின் மனதில் காமாட்சி சிம்மாசனம் அமைத்தாள்!
இவர்களின் சந்தோசத்திற்கு அன்பளிப்பாக 2 பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக ஆகிறார்.,
இன்று இருவரும் கல்யாண வயதில்!
முதல் பெண் --> தன்யஸ்ரீ --> வயது 26!
இரண்டாம் பெண் --> பாரதி --> வயது 24!
(தியாகம் தொடரும்)
வாசக உள்ளங்களுக்கு!
நான் தொடரும் கதையை பற்றிய கருத்தை வரவேற்கிறேன்! உங்களுக்கு இந்த கதையும்.,கதை அம்சமும் பிடித்தால் மட்டுமே தொடருவேன்!
இப்படிக்கு ஓவி!