வாழ்க்கை படி
ஒரு ஊரில் ஒருவன் பலூன் விற்று வாழ்க்கை நடத்தி கொண்டிருந்தான். அவனிடம் எல்லா வகையான வண்ண பலுன்கள் இருந்தன.எப்பொதெல்லாம் அவனுடைய விற்பனை சரிகிறதோ அப்போதெல்லாம் ஹீலீயம் நிரப்பிய பலுன்களை காற்றில் பறக்க விடுவது வழக்கம்.
அதை பார்த்து நிறைய சிறுவர்கள் பலுன்களை வாங்குவதை வைத்து தன் விற்பனையை சரி செய்து விடுவான். ஒரு நாள் அவனுடைய சட்டையை யாரோ பிடித்து இழுப்பதை உணர்ந்து திரும்பி பார்த்தபோது ஒரு சிறுவன் அங்கு நின்று கொண்டிருந்தான்.
அச்சிறுவன் அவனிடம்,நீங்கள் கருப்பு பலுனை பறக்க விட்டால் அதுவும் இப்படி உயர பறக்குமா! என்று கேட்டான். அதை கேட்ட அந்த பலூன் வியாபாரி அச்சிறுவனிடம், தம்பி, இந்த பலுன்கள் பறப்பது அதன் வண்ணத்தினால் அல்ல, மாறாக அதன் உள்ளிருக்கும் விஷயத்தை தவிர வேறொன்றுமில்லை என்றான்.
நீதி: நல்ல உயர்வான எண்ணமே வெற்றிக்கு உந்து சக்தி.