உழைப்பு உயர்வு தரும்

ஊரிலேயே பெரிய ஆலமரம்.அதற்கு கீழே ஒரு திண்ணை.அந்த திண்ணையிலே வெட்டியாக உட்கார்ந்து இருப்பதே பெரிய வேலையாக ஒருவன் செய்து வந்தான்.அவன் பேரு வடிவேலு.
அவன் வேலை அந்த திண்ணையில் உட்கார்ந்து
கால் ஆட்டிகொண்டே இருப்பது வெட்டியாய் பேசி கொண்டு இருப்பது.சோறும் அப்படிதான் கிடைச்சா சாப்பிடுவது என இருந்தான்.
இதுவே ரொம்ப நாளாய் நடந்தது.அவனை கொஞ்ச நாட்களாய் கவனித்து வந்த பெரியவர்.அவனிடம் போய்,தம்பி,இப்படி இங்கே உட்கார்ந்து கொண்டு வெட்டியா கால் ஆட்டி கொண்டு இருப்பதை காஞ்சிபுரம் போய் கால் ஆட்டுனாலும் வேலைக்கு சோறு கிடைக்கும் என சொன்னார்.
அவன் உடனே அப்படியா காஞ்சிபுரத்துல கால் ஆட்டுனாலே சோறா என நடந்தே நாலு நாள் கழிந்து காஞ்சிபுரம் வந்து சேர்ந்தான்.வந்த உடனே ஒரு நல்ல தின்னையா பார்த்து உட்கார்ந்து ,தன் வேலையை தொடங்கினான்.இரவு வரை காலை வெட்டியா ஆட்டிக்கொண்டே இருந்தான்,யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.அப்போ அங்கே வந்த ஒருவரிடம் ஊரில் நடந்ததை கூறி,சோறும் கிடைக்கும் என்றார் கிடைக்கவில்லை என்றான்.
உடனே,அவர் அவனிடம் இது காஞ்சிபுரம் இங்கே பட்டு தொழில் மிக அதிகம்.அதனால் நீ அந்த தொழில் செய்யும் போது காலை கொண்டு செய்ய வேண்டிய வேலை என்பதை தான் அந்த பெரியவர் அப்படி கூறி உள்ளார் நல்ல கால் இருந்தும் பிச்சை எடுக்க நினைக்கும் உன் எண்ணத்தை என்ன சொல்வது என்றார்.
உழைக்காமல் வாழலாம் என நினைத்த அவன் எண்ணமே, அவனை செருப்பால் அடித்தது போல தோன்றியது அவனிற்கு......................................... ( சிறு வயதில் என் டீச்சர் சொன்ன கதையை நான் கேட்டு என் பாட்டிக்கு நான் சொன்ன கதை)

எழுதியவர் : கார்த்திக் (15-Nov-13, 2:01 pm)
பார்வை : 5566

மேலே