கவிதை-காதலி

நான் காதலிக்கிறேன்,
என்,
கவிதையையும்,
காதலியையும்,

காதலியும்,
கவிதையும்,
என்னிடம் கேட்பது,
ஒரே கேள்வி தான்,
எங்களில் யாரை,
அதிகமாய் நேசிக்கிறாய்?


காதலியிடம் உன்னை,
என்றும்,
கவிதையிடம் உன்னை,
என்றும்,
கபலநாடகம் ஆடுகின்றேன்,

என்ன செய்வது,
இருவரும்,
என் உயிர் என்று,
இருவரிடமும் சொல்ல,
முடியாது,

காதலியால் தான்,
கவிதை எழுத,
தொடங்கினேன்,
அப்போ,
காதலிதான் முக்கியம்,

கவிதை எழுதும்,
போது தான்,
என்னால் இயற்கையை,
ரசிக்க முடிகிறது,
சமுக அவலங்களை,
எதிர்க்க முடிகிறது,
அப்போ,
கவிதைதான் முக்கியம்,

இருவரும் என்னை,
விடுவதாக இல்லை,

காதலி என்னிடம்,
உயிரற்ற கவிதை,
என்றால்,
என் உயிரே கவிதை,
என்று சொல்ல,
முடியாமல் தவிக்கிறேன் ,


காதலியிடம் பேசும்,
போது,
கவிதையாய் பேசுகிறேன்,

காதலியை பற்றி,
என்னும் போது,
கவிதையாய் எழுதுகிறேன்,

ஒருவர் இல்லாமல்,
மற்றவரை என்னால்,
நினைக்க முடியவில்லை,

இருவரும் என்னை,
விடுவதாக இல்லை,

கவிஞர்கள் எல்லோருக்கும்,
இப்படியா,
இல்லை,
எனக்கு மட்டும் தானா,

ஆனால் ஓன்று,
இருவருமே என்னை,
அளவுக்கு அதிகமாய்,
நேசிக்கிறார்கள்,
அந்த வகையில்,
நான்,
அதிர்ஷ்டசாலிதான்,

கவிதையை உன்னை,
நான் காதலிக்கிறேன்,

இப்படிக்கு,
உன் அன்பு காதலன்,
இதை,
என் காதலிக்கு,
மட்டும்,
தெரியாமல்,
பார்த்து கொள் !!!

எழுதியவர் : கார்த்திக் (15-Nov-13, 3:42 pm)
பார்வை : 99

மேலே