ஒரு ஏழை தம்பதிகள்

ஒரு ஏழை தம்பதிகள்...

மனைவிக்கு அழகான கூந்தல்.
அதை அழகாக வாரி முடிய ஒரு சீப்பு வாங்கக் கூட வழியில்லாத அளவுக்கு வறுமை

இருந்தும் ஒரு நாள் தன் கணவனிடம்
ஒரு சீப்பு வாங்கித் தருமாறு கேட்கிறாள்.

"நானே என் தாத்தா எனக்குத் தந்த கைக் கடிகாரத்திற்கு ஸ்ட்ராப் போடுவதற்கு கூட பணமில்லாமல் அதைச் சட்டைப் பையில் வைத்துக் கொண்டுடிருக்கிறேன் ..சீப்பு வாங்க பணமில்லை" என்கிறான் ..

கடைவீதியில் திரியும் போது அவன் மனம் குறு குறுக்க தன் கைக்கடிகாரத்தை விற்று ஒரு சீப்பு வாங்குகிறான்.

மனைவி சந்தோஷப் படுவாள் என்று சீப்புடன் வீட்டிற்கு வந்தவனுக்கு அதிர்ச்சி..மனைவி முடியை வெட்டி பாப் செய்திருக்கிறாள்.

தன் அழகான முடியை விற்று அவன் கைக்கடிகாரத்திற்கு
ஒரு வெள்ளி ஸ்ட்ராப் வாங்கி இருக்கிறாள் மனைவி.

நீதி: அன்பு செய்வது ஒரு தவம்
அன்பு செய்யப் படுவது ஒரு வரம்
அன்பு செய்பவரால் அன்பு செய்யப்படுவது ஒரு யோகம் ...

நன்றி - செல்லி

எழுதியவர் : கே இனியவன் (15-Nov-13, 8:24 pm)
பார்வை : 252

மேலே