தியாகம்-3

தியாகத்தை தொடருவோம்.,
25 வருட வாழ்வில் அப்பாவின் சமர்த்தான பிள்ளை தன்யா.,மாநிறம், அழகான முகம், நல்லதோ, கெட்டதோ, எது சொன்னாலும் சரி என்று சொல்ல கூடியவள்., மிகவும் அமைதி,பாந்தம்., தனக்கென்று கருத்து வைத்து கொள்ளாதவள். அப்பா சொல் தட்டாதவள்.,தன்யா பட்ட படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று,முதல் மாணவியாக திகழ்ந்தாள்.
பட்ட படிப்பு முடித்தாகி விட்டது.,மேற்கொண்டு படிக்க தந்தையிடம் கேட்க வேண்டும்.,ஆனால் எதையும் தந்தையிடம் நேரடியாக கேட்காமல், தாயிடம் கூறி மட்டுமே அது தந்தையிடம் போகும்.,
தன்யா, தயங்குவதன் காரணம் மேற்கொண்டு படிப்பை தொடர ஊர் விட்டு ஊர் போக வேண்டும் என்பதால்.,தன்யாவுக்கு இரவு சரியான தூக்கம் இல்லாமல்,தந்தையின் முடிவுக்கு காத்திருப்பதால் குழப்பத்துடனே பொழுது புலர்ந்தது.,
மறுநாள் காலை, காவியன்,தன்யா இங்க வாமா.,
என்னப்பா .?
நீ ஏதோ மேற்படிப்பை தொடர அம்மாட்ட கேட்டதாக சொன்னாங்க,என்ன விசயம்மா.,?
தன்யா தன் படிப்பின் குறிகோளையும், மேற்படிப்பின் பயனையும் கூறினாள்.,
காவி, அமைதியாக அதை கேட்டறிந்து விட்டு, பேச தொடங்கினார்.,
தன்யா.,மேற்படிப்பு வேலை பார்க்க தானே உதவும்.,!நீ இன்று வரை படித்தது போதும்மா! இனி ஓய்வு எடு,அம்மாக்கு சமையலில் உதவியாய் இரு, அப்பாக்கு உன்ன அனுப்பிட்டு தனியா இருக்க முடியாதுமா.,அதும் இல்லாம கல்யாண வயசு வந்தாச்சு. இனி நீ புகுந்த வீட்டுக்கு எங்கள விட்டு பிரிஞ்சு போகணும்.,அது வர எங்கட்ட இரும்மா...! என்று சொல்லி விட்டு கண்கலங்கினார்.,
தந்தை கண்கள் கலங்கியவுடன்,தன்யாவுக்கும் கண்கள் கலங்கியது.,
சரிப்பா என்று சொல்லி விட்டு உள்ளே போனாள்.,

அடுத்த அத்தியாயம்.,

பாரதி- இவள் தான் நம் கதையின் நாயகி.,

(தியாகம் தொடரும்.,)

எழுதியவர் : elakkiyam (15-Nov-13, 8:27 pm)
பார்வை : 189

மேலே