காதலும் நட்பும்

நண்பனின் கல்யாணத்தில்
மேளவாத்தியம் வாசிக்க
வந்திருந்தான் அவன்

ஊரே மெச்சிய வாசிப்பில்
மெய் மறந்த போதும்
யாரும் கண்டுகொள்ளவே இல்லை.
கெட்டி மேளச்சத்தத்தின் மத்தியிலும்
அழுது கொண்டிருந்தத
அவனுடைய நாதஸ்வரத்தை!

கட்டிக் கொண்டவனோடு
காலில் வீழ்ந்து
ஆசீர்வாதம் கேட்டாள்
கண்ணியம் மிக்க காதலி!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Nov-13, 2:33 am)
Tanglish : kaathalum natbum
பார்வை : 308

மேலே