எனக்கு நானே எழுதிய கவிதை குமரிபையன்

உள்ளம் என்பது உடைந்து போனால்
உண்மை நட்பே உயிர்கொடுக்கும்..!
அதில் ஆறுதல் ஆயிரம் அன்புடன்
அமைத்து அதுவே நமக்கு கைகொடுக்கும்..!

எதிரியாய் என்னை காணும் கண்களில்
என்முகம் கோழை ஆயிடுமா..? அவரால்
தன்மனம் தாழ்ந்து தரையில் புதைந்து
தமிழின் தாகம் முடிந்திடுமா..?
.............................................(உள்ளம் என்பது)
அணுகும் நட்பாய் அவர்தம் கைகள்
அடிக்கும் அடியை தாங்கணுமா..? அவர்
சுடுசொல் கேட்டு வெந்நீர் ஊற்றில்
சுருண்டு விழுந்து சாகணுமா..?
.............................................(உள்ளம் என்பது)
உண்மை நிலைக்கும் உயரம் கடக்கும்
உதவா பொய்மை தாண்டாது..! ஒரு
பொய்மை வாய்மையை தீமையால் சுற்றி
பொல்லாப்பு பொதிந்தால் மறையாது.!
.............................................(உள்ளம் என்பது)
உலகில் உன்னை உதைப்பார் இருப்பார்
உன்வழி உழைத்து முன்னேறு ..! அவர்
செவிகளில் ஒலிக்க விழித்திரை ஒளியில்
செங்கோல் பிடித்து நடைபோடு..!
.............................................(உள்ளம் என்பது)
பலவேசம் உன்னில் தலையை காட்டும்
பதர்கள் பார்த்து தள்ளிவிடு..! உன்
விடியல் சொல்லும் நாளை உனதே
விடியும் காலை வெற்றிபெறு..!

குமரி பையனுக்கு
குமரி பையன்..!

எழுதியவர் : குமரி பையன் (20-Nov-13, 11:52 pm)
பார்வை : 949

மேலே